
தமிழ் சினிமா தற்போது பொழிவிழந்து காணப்படுவது படங்களின் ரிலீஸ் நேரத்தில் ஏற்படும் சிரமங்களும், சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் போவதும் தான்.
பெரிய படங்கள் ஏதாவது வந்தால், சரியாக மூன்று வாரங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொள்கின்றன(படம் நல்லா இருந்தாலும் சரி நல்லா இல்லை என்றாலும் சரி).
இதனால், சிறு முதலீட்டில் உருவாகும் திரைப்படங்கள் சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தவிக்கின்றன.
அப்படியாக சிறுமுதலீட்டில் உருவாகி தவித்த சுமா 12 படங்கள் இந்த வாரம் மொத்தமாக களமிறங்குகின்றன.
1. 50 ரூவா
2. அய்யா உள்ளேன் அய்யா
3. கேப்மாரி
4. சாம்பியன்
5. சென்னை டூ பாங்காக்
6. கைலா
7. காளிதாஸ்
8. கருத்துக்களை பதிவு செய்
9. மங்குனி பாண்டியர்கள்
10. மெரினா புரட்சி
11. தேடு
12. திருப்பதிசாமி குடும்பம்
இந்த 12 படங்களுக்கும் எத்தனை எத்தனை திரையரங்குகள் கிடைக்கப்பெறும் என்பது வெள்ளியன்று தான் தெரிய வரும்..