Spotlightசினிமா

ஜி வி பிரகாஷ் & கெளதம் வாசுதேவ் மேனன் இணையும் “13”.!

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றுகிறார்கள். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா, ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் , நடன இயக்குனர் – சந்தோஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரோடு தாங்கள் எப்படி இணைந்தனர் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button