சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஐஓபி வங்கியில் ரூ. 30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பல சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வங்கியில் உள்ள அனைத்து ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 வங்கி கொள்ளை தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது, விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Facebook Comments