Spotlightசினிமா

மீண்டும் தள்ளிப்போகும் ‘என் ஜி கே’… ஏமாற்றத்தில் சூர்யா ரசிகர்கள்!

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் ‘என் ஜி கே’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து காலதாமதம் ஆகிக் கொண்டே வருகிறது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த 2 பாடல்கள் படக்குழுவினருக்கு பிடிக்காமல் போக, வேறு பாடல்கள் கேட்க, கடுப்பான யுவன் பாடல் பதிவினை ஆற போட்டுவிட்டார். பின், செல்வராகவனின் உடல்நிலை சரியில்லாமல் போனது, என அடுத்தடுத்து படம் தள்ளிக் கொண்டே போனது.

படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, தீபாவளிக்கு படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்தது, பின் சர்காரை கண்டு பின் வாங்கியது ‘என் ஜி கே’. கிறிஸ்துமஸ் வெளியிடாக வர நினைத்து அதுவும் தற்போது முடியாமல் போக, பொங்கலுக்கு நிச்சயம் வருவோம் என படக்குழு அடித்துக் கூற, தெலுங்கு திரையுலகில் சூர்யாவிற்கு நல்ல ஒரு ஓபனிங் இருப்பதால் பொங்கல் தினத்தில் மகேஷ் பாபுவின் படம் ரிலீசாக இருப்பதால் அதில் இருந்தும் பின் வாங்கியது ‘என் ஜி கே’.

தற்போது படத்தினை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இப்படத்தினை டமிகப் பெரிய பொருட் செலவில் தயாரித்தது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு.

Facebook Comments

Related Articles

Back to top button