
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளதாவது, “18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அமமுக தயாராக உள்ளது. 20 தொகுதிகளிலும் அதிமுகவால் டெபாசிட் கூட பெற முடியாது. ஆர்.கே.நகர் தேர்தல் போல் தோல்வியடைவர். மண்குதிரை யார் என்பதை எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பட்டாசு விவகாரம் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததுபோல், பட்டாசு வழக்கிலும் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





