Spotlightசினிமா

கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் தனுஷோடு சேரும் மாரி..!!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரம்மாண்ட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை ராமின் உதவி இயக்குனரும் சமீபத்தில் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனருமான மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இது தனுஷ் ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைத்திருக்கிறது.

இது குறித்து தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

“பரியேரும் பெருமாள் படம் பார்த்தேன் . அந்த படத்தோட மேக்கிங் மற்றும் லைப் ஸ்டைல் என்னை அந்த படத்துடன் ஒன்றிப் போக செய்து விட்டது. மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

அடுத்து கலைப்புலி எஸ்.தாணுவின் வி .கிரியேசன் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறேன். இயக்குனர் மாரிசெல்வராஜ் டீமுடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என கூறியுள்ளார் .

Facebook Comments

Related Articles

Back to top button