
குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி எஸ் முருகன் தயாரித்து வரும் படம்தான் ‘இதுதான் காதலா”.
விஞ்ஞான ரீதியான கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஞ்ஞான மனிதனாக டைரக்டரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்துள்ளார்.
இக்கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, ஆயிஷாவும், சுகுமார், கூல் சுரேஷ், பாலு ஆனந்த், சின்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் – கணேஷ்ராஜா
இசை – சங்கர்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசிம்மா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஊமை விழிகள் புகழ் டைரக்டர் ஆர் அரவிந்த்ராஜ் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய படத்தின் நாயகன் சரண், ’ரஜினி சார் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்திலும், கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புது படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இனி முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.’ என்று கூறினார்.





