
தமிழ் சினிமாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது முகவரியை தொடர்நது மாற்றிக் கொண்டே இருந்தது. அது ஏன் என்று நாம் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் தங்கி இந்த வேலையை செய்து வந்தவர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் தான் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை அந்த வலைதளத்தில் பதிவேற்றி வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்களுக்கும் சர்வேதச அளவில் இயங்கும் அந்த இணையதள அட்மின்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





