
ரஷ்யா: மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ ((Sheremetyevo )) விமான நிலையத்திலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு ((Murmansk)) ஏரோபிளோட் விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்ததும் உடனடியாக விமானத்தை தரையிறக்கி நிறுத்த விமானி முயன்றார். அப்போது விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியது.
இந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 41 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
Facebook Comments





