Uncategorized

தினமும் ஒரு முறை செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள்.. உலக கோடீஸ்வரரின் அறிவுரை!

லக நாடுகள் வியக்கும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தான் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் இவர். அது மட்டுமல்லாமல் உலக மகா பணக்காரர்களில் ஜாக் மாவும் ஒருவர்.

பெய்ஜிங்கில் அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஜாக் மா, தனது ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அலிபாபா நிறுவன ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் உடல் புத்துணர்வு பெற்று உழைப்பில் ஆர்வம் காட்ட முடியும் என்று ஜாக் மா கூறினார்.

ஜாக் மாவின் இந்த அறிவுறுத்தலை கேட்டு அலிபாபா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னர் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி அதிர வைத்தார் இவர். இந்த நிலையில் தினமும் ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கூறியது அவர்களை பீதியடையச் செய்தது.

Facebook Comments

Related Articles

Back to top button