Spotlightசினிமா

ஆட்டோ ஓட்டுநர்களை பெருமைப்படுத்திய தளபதி விஜய்!

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்க இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நடிகர் விஜய் உழைப்பாளர் தினத்தை(மே 1) முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் ரசிகர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தனது சொந்த செலவில் இந்நிகழ்ச்சியை நடத்துவதை நடிகர் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்தமுறை அவர் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால், அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார்.

Facebook Comments

Related Articles

Back to top button