Uncategorized

வெளியானது “லாக் டவுன்” படத்தின் டீசர்… எக்ஸ்ப்ரஷன் க்யூனாக தோன்றிய அனுபமா பரமேஸ்வரன்!

ஏ ஆர் ஜீவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் லாக் டவுன். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

லைகா தயாரிப்பில் சுபாஸ்கரன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நேற்றைய தினம் லாக்டவுன் படத்தின் டீச வெளியானது. இந்த டீசரில் அனுபமா பரமேஸ்வரன் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி ஒரு எக்ஸ்ப்ரஷன் க்யூனாக காட்சியளித்தார்.

தொடர்ந்து இந்த டீசர் இணையத்தில் பரப்பப்பட்டு வரும் நிலையில், படத்தினை இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் சார்லி, நிரோஷா, மற்றும் ப்ரியா வெங்கட் நடித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button