
தனுஷ் தயாரித்து ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் தான் ‘மாரி 2’. இப்படத்தினை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடலான ‘ரெளடி பேபி’ என்ற பாடல் பட்டி தொட்டிதோறும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இதுவரை யூ-டியூப் தளத்தில் சுமார் 500 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இதுவரை தென்னிந்திய சினிமாவில் ஒரு பாடல் இந்த அளவிற்கு அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிரபுதேவா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





