
தென்னிந்தியாவில்அயல் நாடுகளில் தொடங்கிய இந்தியா வரை மிகவும் பிரபலமான டி வி ஷோ’தான் பிக்பாஸ்.
தென்னிந்தியாவிலும் இதன் தாக்கம் பெரிதளவில் இருந்தது. தமிழில் நடிகர் கமலஹாசன் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனையும் இவரே தொகுத்து வழங்க இருக்கிறார்.
தெலுங்கில் முதல் சீசனை நடிகர் ஜுனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். முதல் சீசனை போன்று ஒரு விறுவிறுப்பு இரண்டாவது சீசனில் இல்லாமல் போனது.
தெலுங்கில் மூன்றாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், மூன்றாவது சீசனில் பங்குகொள்ள நட்சத்திரங்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த சீசனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், நிகழ்ச்சி குழு தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நடைபெற்று வருகிறது.
ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என கூறியுள்ளது. நாகார்ஜூனா, வெங்கடேஷ் அல்லது அனுஷ்கா தான் தொகுப்பாளர் என பெயர் அடிபட்டு வந்த நிலையில் நாகார்ஜூனா தான் என மெஜாரிட்டியாக தகவல் சுற்றி வருகிறது.





