
2012 ஆம் ஆண்டு சென்னை மடிப்பாக்கம் LIC நகரில் உள்ள நிலத்தை பிரபல நடிகையும் சீரியல் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி தன்னுடைய நிலம் என்று கூறி ஒரு நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
விற்கப்பட்ட அந்த நிலத்தின் உண்மையான நில உரிமையாளர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் குட்டி பத்மினி மீது புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால், காவல்துறையினர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் OS: 36/2012 என்ற எண்ணில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அந்த நடிகை போலி ஆவணங்களை வைத்து இந்த நில மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் எந்த நேரமும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Facebook Comments





