Spotlightசினிமா

ப்ளாக்பஸ்டர் படமாக வெற்றிக் கொடி நாட்டிய “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”!!

Cheers Entertainments சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”. கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப், மின்னல் முரளி இயக்கிய திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் மற்றும் நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

அனைவரும் ரசிக்கும்படியான முழுமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”. இப்படம் ராஜேஷ் & ஜெயா தம்பதியினரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்களுக்குள் நிகழும் கதையை சொல்கிறது. மிகவும் அவசியமான ஒரு சமூகப் பிரச்சினையை அசத்தலான நகைச்சுவையுடனும், அனைத்து தாக்கங்களுடனும் எடுத்துச் சென்றதில் இயக்குனர் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார். இப்படம் இந்த ஆண்டில் (2022) மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி சாதனை படைத்து வருகிறது.

“ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் கேரளா மற்றும் GCC யின் ஆரம்ப வெளியீட்டில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35 கோடிகளை வசூலித்துள்ளது. தற்போது மேலும் இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டராக உருவானது மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது. ஜெய ஜெய ஜெய ஜெய ஹே நவம்பர் 11, 2022 அன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. கேரளாவில் முதல் நாளிலேயே இப்படம் சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு : பப்லு அஜு, இணை எழுத்தாளர்: நஷித் முகமது ஃபேமி, எடிட்டர்: ஜான்குட்டி, இசையமைப்பாளர்: அங்கித் மேனன், ஆக்சன் இயக்குனர்: பெலிக்ஸ், கலை இயக்குனர்: பாபு பிள்ளை.

Facebook Comments

Related Articles

Back to top button