
தமிழகத்தில் சீரியல்களையும் ரசிகர்களையும் ஒரு காலமும் பிரிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வரிசையில், விஜய் டிவி-யில் தொடர்ந்து ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் தான் ‘ராஜா ராணி’.
அதில் நடித்து வரும் சஞ்சீவ், ஆல்யா மானசா, சீரியலில் ஜோடி போட்டதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகினர். இவர்கள் இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து, ராஜா ராணியில் இவர்களுக்கான கெமிஸ்ட்ரி மிக வேகமாக சூடி பிடிக்க ஆரம்பித்தது.
இதனால், சீரியலும் நல்ல வரவேற்பு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் டிவி சீரியலை திடீரென்று முடித்துக்கொள்ளும் சேனல் நிர்வாகத்தின் முடிவால் ஒட்டு மொத்த ‘ராஜா ராணி’ குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
காரணம் என்னவென்று கேட்டால், ராஜா ராணியின் இரண்டாம் பாகத்தை இதே ஜோடியை வைத்து எடுக்கவிருக்கிறார்களாம் நிர்வாக குழுவினர்.
இரண்டாம் பாகத்தில் காதலர்களாக காட்டுவதற்காவே சேனல் நிர்வாகம் இத்தகைய முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.




