Spotlightசினிமாதமிழ்நாடு

சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்; அமைச்சர் கடம்பூர் ராஜு. சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு!

நேற்று முன்தினம் அகரம் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் சூர்யா, ‘50 கோடி மாணவர்களின் எதிர்காலத்துக்கான புதிய கல்வி கொள்கை பற்றி பெரிய அளவில் யாரும் விவாதங்களில் பேசவில்லை என்பதை அறியும் போது வருத்தம் ஏற்படுகிறது.

கண்டிப்பாக இந்த விவகாரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்டுபோய்விடும்” என்று சூர்யா புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்தார்.

முன்னதாக சூர்யாவை பாஜகவை சேர்ந்த தமிழிசை மற்றும் எச்.ராஜா ஆகியோர் விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவும் விமர்சித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button