
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகியுள்ளது ‘காப்பான்’. இப்படத்தினை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹரீஷ் ஜெயராஜ்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ரஜினிகாந்த், ‘ சில தினங்களுக்கு முன் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்திற்கு நான் ஆதரிக்கிறேன்.
தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது.
புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா.
அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. ’ என்றார்.
சூர்யாவின் புதிய கல்வி கொள்கைக்கு ரஜினி ஆதரவு என்றதும் அரங்கமே விண்ணை முட்டும் அளவிற்கு விசில் சத்தம் பறந்தது.





