Spotlightசினிமா

’கனா’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்றார் அருண்ராஜா காமராஜ்!

றிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், சத்யராஜ் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் தான் ‘கனா’.

இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதில் சொல்லப்பட்ட விவசாயம், பெண்களின் முன்னேற்றம் ஆகியவை படத்தின் முக்கிய கருத்தாக சொல்லப்பட்டதால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இவ்வருட ’Provoke3’ விருது விழாவில் கனா படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது அருண்ராஜா காமராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வழங்கப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button