
பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ’சாஹோ’.
வருடக்கணக்கில் எடுக்கப்பட்ட இப்படம் இந்திய சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு சுமார் 350 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பல கோடி செலவில் ப்ரொமோஷனும் நடைபெற்று வருகிறது.
ஹீரோ பிரபாஸும் அனைத்து மாநிலங்களுக்குச் சென்றும் இந்த படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்திற்கும் இப்பட ப்ரொமோஷனுக்காக பல முறை வந்து சென்றுவிட்டார்.
வரும் 30 ஆம் தேதி வெளிவரும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இதுவரை பெரிதாக எந்த திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை ஆகவில்லை.
இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் தமிழகத்தில் பாகுபலி 2 நல்ல வசூல் கிடைத்த ஆன நிலையில், இப்படத்திற்கு ஓபனிங் சரிவர கிடைக்கவில்லையே என வருத்தத்தில் இருந்தாலும், படம் சூப்பராக இருந்தால் நிச்சயம் பிக்-அப் ஆகிவிடும் என்கிறது ஒரு தரப்பு…
காத்திருப்போம் 30ஆம் தேதி வரை…





