Spotlightசினிமா

கனவிலேயே வாழும் மொரட்டு சிங்கிள்களுக்கு இப்படம் சமர்ப்பணம் – ‘பப்பி’ நாயகன் வருண்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக நாயகனாக நடித்திருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு, தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார்.

“பப்பி” படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நாயகன் வருண், ‘ என்னை சின்ன,சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்க, பப்பி படக்கதை கேட்டபோதே நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழக்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது. டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும் ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும்.

இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது. இயக்குநர் மிகவும் திறமையானவர் அவர் செய்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப்படத்தில் ரசித்து ரசித்து வேலை பார்த்துள்ளேன். இந்தப்படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன்.

சம்யுக்தா வேறு ஒரு படத்திற்காகத்தான் முதலில் வந்தார். மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். அவருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இயக்குநர் அதை உடைத்து நன்றாக எடுத்திருக்கிறார். யோகிபாபுவுடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்க தயக்கமாக இருந்தது. அதன் பிறகு மிகவும் நெருக்கமாகி விட்டார். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும்.

இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப்படம் சமர்ப்பணம்.’ என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button