
ஜெய், அதுல்யா ரவி வைபவி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கேப்மாரி’.
ஜெய் – வைபவி இருவரின் முதல் சந்திப்பு இரயிலில் நடைபெறுகிறது. இருவரும் குடித்து விட்டு இரயில் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்.
அதன்பின், இரண்டு வருடத்திற்கு பிறகு சந்திக்கும் இருவரும் நலம் விசாரித்துக் கொள்ள, அது கடைசியாக திருமணத்தில் சென்று நிற்கிறது.
திருமணம் முடிந்து நடைபோடும் இவர்களது வாழ்க்கையில் நுழைகிறார் அதுல்யா ரவி. ஜெய்யுடன் அலுவலகத்தில் பணிபுரியும் அதுல்யா, இவர் மீது ஒரு தலை காதல்.
ஒருமுறை, அதுல்யாவின் வீட்டிற்கு செல்லும் ஜெய் போதையில் அதுல்யாவுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார். விளைவு, அதுல்யா கர்ப்பமாகி விடுகிறார்.
தனக்கும் ஜெய்யுடன் பங்கு இருப்பதாக ஜெய்யின் வீட்டிற்கு குடியேறுகிறார் அதுல்யா. தனது மனைவி வைபவி ஒருபக்கம், தனது குழந்தையை சுமந்து நிற்கும் அதுல்யா ஒருபக்கம் என ஓடும் ஜெய்யின் வாழ்க்கை இறுதியாக என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஜெய் இப்படத்தில் ப்ளே பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு டயலாக்கிலும் டபுள் மீனிங் வசனங்கள். 4 பீர் அடித்தால் என்ன செய்கிறோம் என்ற தெரியாத அளவிற்கு பல்லான வேலைகளையும் செய்து விடுகிறார் ஜெய்.
அதுல்யாவும் வைபவியும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கின்றனர்.
அதிலும்,
வீட்டு வேலைக்காரி வந்தால் கூட.. வீட்டுக்கு வேலை வந்திருக்கேன் என சொல்ல மறுக்கிறார். நான்தான் பால் குடுப்பேன் என பேசுகிறார்.
ஓவர் நைட்ல எனக்கு ஒலகத்தையே காமிச்சிட்டார். செம பீல்யா என அதுல்யா டயலாக் எல்லாம் பேசுகிறார்.
அவன் அப்படிதான் சொருகினா, எங்கே சொருகினான்னு மறந்துடுவான்.. நான் பென்ட்ரைவ் சொன்னேன் என அதுல்யா வேற காம நெடிகளை அள்ளி வீசுகிறார்.
பேட்டு, பால் என கிரிக்கெட் போல பெட்ரூம் விளையாட்டு ஆடுகின்றனர்.
படம் முழுவதும் சரக்கு அடித்துக்கிட்டே இருக்கிறார் ஜெய்.
2 விசிலு வர்றதுக்குள்ள குக்கர் ஆஃப் ஆச்சு என்று செக்சில் 2 ரவுண்டுகளை சொல்கிறார் வைபவி.
சமூகத்திற்கு பல கருத்துகளை சொல்லி படத்தினை இயக்கிய எஸ் ஏ சந்திரசேகரா இப்படியொரு ஆபாச படத்தினை இயக்கியது என்று அனைவரும் மூகம் சுழிக்குபடியான படத்தினை இயக்கியிருக்கிறார் எஸ் ஏ சி.
ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். வைபவின் காலுக்கு அடியில் ஒரு காட்சி வைத்திருக்கிறார் பாருங்கள் என்னவொரு கண்ட்ராவி காட்சி.. அச்சச்சோ அது ஒரு கண்கொள்ளா காட்சி…
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான்.
தரமான படங்களை இயக்கிய இயக்குனர் வரிசையில் டாப் லிஸ்டில் இருந்த எஸ் ஏ சி, ஒரே படத்தில் அந்த பட்டியலில் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.



