Spotlightசினிமா

தமிழ் சினிமாவை கலக்க வருகிறது த்ரில்லர் திரைப்படம் ‘அம்பாசடர்’!

ந்த வருடம் 2020 இறுதியில் தமிழ் திரையுலகில் கலக்க உருவாகுகிறது ஒரு முற்றிலும் மாறுபட்ட புதிய த்ரில்லர் திரைப்படம். கேரளாவில் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மலையாள இயக்குனர் சமர் தமிழில் முதல்முறையாக இயக்குகிறார்.

“இந்த படத்திற்கு அம்பாசடர்/ AMBASSADOR என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கதிரவன் நாயகனாகவும் ,நடிகர் ஷைன் ரவிகுமார் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தினை அதிக பொருட்செலவில் தனிஷா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து இயக்குனர் கூறும்போது, “தற்போது படத்தின் தலைப்பை மட்டும் வெளியிடுகின்றோம், இதில் நடிக்கும் மற்ற நடிகைகள் நடிகர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கப்படும்”, என்று பெரும் மகிழ்ச்சியுடன் இயக்குனர் சமர் தெரிவித்தார்.

#ActorKathiravan #Ambassador #அம்பாசடர் #நடிகர் கதிரவன் #ShainRavikumar #Kathiravan

Facebook Comments

Related Articles

Back to top button