Spotlightதமிழ்நாடு

நாளை முதல் தமிழக எல்லைகள் மூடல்; முதல்வர் அதிரடி உத்தரவு!

மிழகத்தின் எல்லைகள் நாளை முதல் மூடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக எல்லைகள் நாளை முதல் 31ம் தேதி வரை மூடப்படும்.

கேராளா, கர்நாடகா, ஆந்திர எல்லைகள் மூடப்படும்.

தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு நாளை முதல் தடை

அனுமதிக்கப்படும் வாகனங்களில் வருவோர் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அமரர் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி.

நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button