
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது.
ஆதலால் தலைமை மருத்துவர் கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரு.சாயல்ராம் அவர்கள் தலைமையில் நாம்தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் இரத்ததானம் செய்தனர்.
இரத்த தானம் செய்த நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைமை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Facebook Comments





