
கீர்த்தி சுரேஷுக்கும் லிங்காவுக்கும் திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. ஒருநாள் அந்த குழந்தை காணாமல் போய் விடுகிறது. உன்னுடைய அலட்சிய போக்கினால் தான் குழந்தை காணாமல் போனது என கீர்த்தி சுரேஷை விட்டு பிரிகிறார் லிங்கா.
5 வருடங்களாக தனது மகனை நினைத்து ஏங்குகிறார் கீர்த்தி சுரேஷ். ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் கீர்த்தி.
7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி சுரேஷிடம் தொலைந்து போன மகன் கிடைத்து விடுகிறான். அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறான் அந்த சிறுவன்ன்.
அந்த சிறுவனுக்கு அப்படி என்ன தான் நடந்தது.?? அவனை கடத்தியது யார்..?? என்பதை கண்டுபிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ரிதம் என்ற கதாபாத்திரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு தாய் தன் மகனை காணாமல் வாடும் தவிப்பினை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் கீர்த்தி. அழகோவியமாக பார்த்த கீர்த்தியா இது.? என்று பல இடங்களில் கேள்வி கேட்க வைக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக அனைத்து வேலைகளையும் செய்வதை ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது இயக்குனரே.
பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் எட்டி எட்டி பார்த்துவிட்டு தான் செல்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் டாக்டருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் நடக்கும் ’கேம்’, எரிச்சலின் உச்சக்கட்டம்.
அதுவரை பேசாமல், அதிர்ச்சியில் இருக்கும் அந்த சிறுவன், படம் முடிய போகிறது என்றவுடன் பேசுவதெல்லாம் என்ன மாதிரியான லாஜிக்..??
க்ளைமாக்ஸில் கீர்த்தியின் நண்பர்களை வைத்து விளையாடும் ஒரு ‘ட்விஸ்ட்’ காட்சிகள் 50 வருடமாக தமிழ் சினிமா பார்த்து வரும் காட்சிகள் தான்.
படத்தில் ஒரு கணவருக்கே வேலை இல்லை, இதில் இரண்டு கணவர்கள் வேறு..??
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு ஒன்றே படத்தில் நமக்கு மிகப்பெரிய ஆறுதல். படத்தில் பாடல்கள் எதுவுமில்லை. சந்தோஷ் நாராயணனின் பின்னனி இசை ஓகே ரகம் தான். பெரிதாக ஒன்றுமில்லை.
திரைக்கதையின் ஓட்டம் ஆமை வேகத்தில் நகர்வது பார்ப்பவர்களின் பொறுமையை அளவுக்கதிகமாக சோதிக்கிறது. ‘யப்பாபாபா சாமி முடியலடா….. விட்ருங்க’ அப்படின்னும் கமெண்ட் வந்தாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.
பென்குயின் – ’குயின்’னு நினைச்சு தான் நாங்களும் பார்த்தோம். பட்…………….





