Spotlightசினிமா

காதல் வலை பின்னும் ஹரீஷ் கல்யான் – ப்ரியா பவானி சங்கர்!

தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றியடைந்த ரொமான்ஸ் காமெடி படமான  “பெல்லி சூப்புலு”  படம் தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ரீமேக்காகிறது.

இப்படத்தை A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை  SP Cinemas மேற்கொள்கின்றனர்.  இப்படத்திற்கு தற்போது  “ஓ மணப்பெண்ணே” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Madhav Media மற்றும் Third Eye Entertainment நிறுவனம் தமிழில் இப்படத்தின் நெகடிவ் உரிமையை பெற்றிருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற  இப்படத்தை தமிழில் தற்போது ஹரீஷ்கல்யாணை ஹிரோவாக வைத்து பெரும் நம்பிக்கையுடன் படத்தை தயாரித்துள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாரயணா மற்றும் ரமேஷ் வர்மா பென்மட்ஷா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. வசனங்களை தீபக் சுந்தர்ராஜன், எழுதியுள்ளார்.  விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கிருபாகரன் செய்கிறார். கலை இயக்கத்தை சதீஸ்.K செய்துள்ளார். ஒலிக்கலவையை Knack Studios செய்துள்ளனர். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். க்வான் சவுத் ஏஜென்ஸி பார்டனராக பணியாற்றி உள்ளனர். தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொண்டுள்ளனர்.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு பற்றி மிக விரைவில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button