Spotlightசினிமா

விஜய பிரபாகரன் பாட்டுப் பாடி, நடித்துள்ள எழுச்சி பாடல்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின் FIRST LOOK போஸ்டரை நேற்று தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனிஇசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன்

இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார். இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..

தமிழை என்னுயிர் என்பேன் நான்… தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்று கூறினார். மேலும், இப்பாடல் இளைஞர்களுக்கு ஒரு எழுச்சி பாடலாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button