
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவந்த “நட்பே துணை” படத்தில் ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானவர் ‘அநேகா’.
அடுத்ததாக சந்தானம் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த ‘டிக்கிலோனா’ படத்தில் முதன்மை கதாநாயகியாக தோன்றினார்.
இப்படத்தில், எமோஷ்னல் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த அநேகா, இதில் வரும் ஒரு பாடலில் ஆடி எக்ஸ்ப்ரஷன் குயினாக மாறியுள்ளார்.
‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலின் ரீமேக் பாடம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த பாடலில் அநேகாவின் எக்ஸ்ப்ரஷன் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என எங்கு திரும்பினாலும் இவரது நடனமும், எக்ஸ்ப்ரஷனுமாக இருக்கிறது.
ஒரே பாட்டில் ஓஹோ வாழ்க்கையாக மாறிவிட்டது அநேகாவிற்கு…
Facebook Comments





