Spotlightதமிழ்நாடு

நீட் தேர்வு தோல்வி அச்சம்; மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு!!

காட்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி அருகே தலையாரம் பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு, ருக்மணி. இவர்களுக்கு செளந்தர்யா(17) என்ற மகள்.

இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற நீட் தேர்வினை எழுதியுள்ளார்.

இந்த தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டு மரணம் அடைந்தார்.

இந்த வருட நீட் தேர்வால், 3 உயிர்கள் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து சோக நிகழ்வு நடந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button