
சுமார் 25 விருதினை பெற்ற சிதை படத்தின் இயக்குனர் தான் கார்த்தி ராம்.
இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘சிதை குறும்படத்தின் வாயிலாக பெண்களைப் பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்களை ஒரே ரூமுக்குள் இரு கதாபாத்திரங்களை வைத்து இயக்கியுள்ளார் கார்த்தி ராம். நாட்டில் பல பிரச்சனைகள் பெண்களுக்கு உள்ளது அதில் ஒன்று தான் இந்த பிரச்சனை.
பிரச்சனைகளை பேச பேசத்தான் பெரிதாகி முடிவுக்கு வரும்ன்னு சொல்வாங்க, அப்படித்தான் இக்குறும்படமும் பேசி பேசியே உலக நாடுகளில் பெண்களுக்கு நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு(Female Genital Multilations) என்ற சடங்கு முறையை பற்றி இக்குறும்படம் பேசுகிறது.
இந்த சடங்கு முறை எப்படி இருக்கும் என்றால், பெண்ணுறுப்பில் உள்ள க்ளிட் டோரியஸ் உணர்ச்சிகரமான இடத்தை கத்தியால வெட்டி எடுப்பாங்க, அடுத்தது ப்ளேடால் பெண்ணுறுப்பின் இன்னர் லிப்ஸ் என்கிற இடத்தை ப்ளேடால் அறுப்பாங்க, அடுத்தது ப்ளேடால் அவுட்டர் லிப்ஸ் ப்ளேடால்&அ அறுப்பாங்க அறுத்த உடனே ஒரு வெள்ளை மருந்தை தடவி அந்த இடத்தை தச்சுயிருவாங்க தச்சு முடிச்சு உடனே ஒரு ரூமுக்குள்ள அடைச்சு 40 நாள் தனிமைபடுத்தியிருவாங்க என்று நிஷரின் சைஃப் சொல்லி முடிக்க எங்கள் இதயம் டப் டப் டப் என்ற சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.” என்று கூறினார் இயக்குனர்.
எப்படி ஒரு உறுப்பை வெட்டி எறிந்து சாதாரணமா இருக்க முடிகிறது. இவனுங்களுக்கு சடங்கு சம்பிராதயம் வேற.
மேலும் இயக்குனர் பேசும்போது, “எழுத்தாளர் பாலா நிஷரின் சைஃப் வாழ்க்கையை பற்றி கேட்டவுடன் அவர்களுக்காக குரல் குடுக்க ஆரம்பித்துவிட்டார் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது, அதுபோலத்தான் இப்படமும் முடிந்தது.
இப்படி கதையம்சம் கொண்ட குறும்படத்தை திரைப்படமாக்க வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் தேன் படத்தோட கதாநாயகன் தருணிடம் நான், அழகான காதல் கலந்த த்ரில்லர் கதை சொல்லியிருக்கிறேன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பவிருக்கிறது.
சிதை இரண்டாவது படமாக உருவாக்கப்படுகிறது. கடைசியாக என்னுடைய குறும்படத்துக்காக உழைத்த நடிகர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
ஒரே குறும்படத்தில் சுமார் 25 விருதுகளை பெற்று தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா ஜாம்பவான்களால் திரும்பி பார்க்க வைக்கப்பட்டுள்ளார் இயக்குனர் கார்த்தி ராம்.
சிதை குறும்படம் பெற்ற விருதுகள், இதோ
1. Iconic short cine awards – best script
2. Cochin international film awards – best creative concept
3. Bharath independent cinema film festival – best story
4. Vee’s media short film festival – peniyam pasum movie award
5. Vintage reels film festival – Best film
6. Vintage reels film festival – Best actor
7. Indian Asian film festival -Best story
8. Indian creative minds – best drama
9. Short international film festival- Best regional film – 2 awards,
10. Short international film festival -Best short film – 1 awards
11. Filmadora film festival srilanka – best short film
12. Indian short film awards-2nd runner best story
13. Bioscope cine film festival – best promosing talent
14. International feature & short film festival – best editor
15. The indie online film festival – best screenplay
16. Global indie film awards-Best director
17. Chalchitra rolling awards-Best experimental film
18. Indian short cinema film festival – best promosing filmmaker,
19. Indian short cinema film festival -best tamil film
20. Wallet films-Best story,
21. Wallet films-best script
22. Shankhnaad film festival awards -best director,
23. Shankhnaad film festival awards -Jury Mention
24. Indian Film Festival – Juary award (for great Filmmaking)
25. Cult Cinema film Festival – Best Production Design
நன்றி: சுந்தர் பாலா




