
நேற்று முன்தினம் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.
இதனால், கன்னட சினிமா உலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.
அவரது ஏராளமான ரசிகர்கள் ஆழ்ந்த கண்ணீர் கடலில் மிதந்தனர். பல நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கர்நாடகா முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது பூத உடலுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இறுதி மரியாதை செய்தார். அவரது நெற்றியில் முதல்வர் முத்தமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
Facebook Comments





