Spotlightசினிமா

நட்சத்திரம் நகர்கிறது: அமோக வரவேற்பால் அதிகரித்த திரையரங்குகள்.. !!

யக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “நட்சத்திரம் நகர்கிறது”.

A தரச் சான்றிதழ் பெற்றதால் குடும்ப ரசிகர்கள் பட்டாளங்களை கவர முடியவில்லை என்றாலும், நிகழ்கால காதல் அரசியலை கண்முன்னே நிறுத்தியதற்காக படத்தினை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

யாரும் துணிந்திடாத ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.

தரச் சான்றிதழை கணக்கில் வைத்து ஆரம்பத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலே கொடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button