
அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “வலிமை” வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் தான் உள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கப்பட இருக்கிறது.
இப்படத்தின் துணை நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கவின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
விரைவில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பால் கவின் ரசிகர்கள் உற்சாம் அடைந்துள்ளனர்.
Facebook Comments




