Spotlightசினிமா

இது சூர்யாவிற்கான பெருமை… ’NGK’ படைத்த அசாத்திய சாதனை!

செல்வராகவன் இயகக்த்தில் சூர்யா நடிக்க உருவாகியுள்ளது ‘NGK’. படத்தின் வேலைகள் அனைத்தும் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தினை இம்மாதம் 31 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படம் ஓர் அரசியல் படமாகத் தயாராகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரளாவில் விஜய்க்குப் பின் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ் நடிகராக சூர்யா உள்ளார். இந்த நிலையில், என்.ஜி.கே. கேரளத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. கேரளாவின் ‘We1000Lovers’ என்ற பெண்கள் அமைப்பு, மலப்புரம் சூர்யா ரசிகர் மன்றத்துடன் இணைந்து மார்ஸ் என்ற திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒருங்கிணைக்கப்படுவது கேரளத்தில் இதுவே முதல் முறையாகும்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker