Spotlightசினிமா

1000 கோடி ரூபாய் வசூலை குவித்த RRR; அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடியா.?

எஸ் எஸ் ராஜமெளலி இயக்க ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிக்க வெளியான திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் ரிசல்ட்டும் பாஸிடிவாக அமைந்தது. உலகில் பல நாடுகளில் இப்படம் வெளியானது.

படம் வெளியாகி இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது இப்படம்.

இதற்கு முன் ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படமே அமெரிக்காவில் 100 கோடி வசூலை ஈட்டியிருந்தது. தொடர்ந்து தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறார் இயக்குனர்.

இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஆர் ஆர் ஆர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button