Spotlightசினிமா

பீஸ்ட் தாறுமாறா இருக்கும் ; ஆனா கதைய பத்தி மட்டும் என்கிட்ட கேட்காதீங்க – தெறித்து ஓடிய யோகிபாபு!

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பீஸ்ட்”. இப்படத்தில் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. ட்ரெய்லரில் ஏறக்குறைய முழுக் கதையும் சொல்லிவிட்டது போன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்.

யோகிபாபு நடித்த கூர்கா படத்தின் கதை போன்று பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இருப்பதாக நெட்டிசன்கள் ட்விட்டரில் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு , பீஸ்ட் படம் தாறுமாறாக இருக்கும். விஜய்யின் மற்ற படங்களை போன்று இந்த படமும் வேற லெவலாக இருக்கும் என்று கூறினார். படத்தின் கதை கூர்கா படத்தின் கதை போன்று உள்ளதே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் எதுவும் கூறாமல் ஆளை விடுங்கப்பா சாமி என்று தலை தெறிக்க அங்கிருந்து சென்று விட்டார் யோகிபாபு.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close