
பா இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், ரெஜின் ரோஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”நட்சத்திரம் நகர்கிறது”. பா ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களின் வரிசையாக இது நிச்சயம் இருக்காது என்பதை ட்ரெய்லர் வாயிலாகவே நாம் பார்த்துவிட்டோம். அப்படியென்ன புதுமையை படத்தில் புகுத்தியிருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா இருவரும் காதலர்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது, காளிதாஸ் துஷாராவின் ஜாதியை வைத்து பேச, இதனால் கோபம் அடைந்து அவருடனான காதலை முறித்துக் கொள்கிறார் துஷாரா.
ஒரு நாடக கம்பெனியில் காளிதாஸ், துஷாரா, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்டவர்களும் இருக்க அதே இடத்தில் பெண்ணும் பெண்ணும் காதல் புரியக்கூடிய ஜோடியும், ஆணும் ஆணும் காதல் புரியக் கூடிய ஜோடியும், ஆணும் திருநங்கை ஜோடியும் அங்கு இருக்கின்றனர்.
இந்த நாடகக் கம்பெனியில, வேறொரு தளத்தில் இருந்து வேறொரு மனநிலையோடு நடிப்பு பயிற்சி பெற வருகிறார் கலையரசன். இந்த நாடகக் கம்பெனியில் இருப்பவர்களை சற்று வித்தியாசமான பார்வையில் பார்க்கிறார் கலையரசன்.
இவர்கள் அனைவரும் இணைந்து நாடகம் ஒன்றை அரங்கேற்ற நினைக்கிறார்கள். காதல் நாடகம் அது. காதலுக்குள் இருக்கும் அரசியல், காதலின் மனநிலை உள்ளிட்ட பலவற்றை அலசி எடுக்கப்பட்ட படம் தான் இந்த “நட்சத்திரம் நகர்கிறது”.
இறுதியாக காதல் நாடகம் மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகனாக நடித்த காளிதாஸ், முகபாவனை, நடனம், எமோஷ்னல், காதல் என அனைத்து பிம்பங்களிலும் பிரகாசமாக ஜொலித்து நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார். கலையரசனும் தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார். அதிலும், அவர் தண்ணி அடித்துவிட்டு அடிக்கும் அலப்பறைக் காட்சியில் அப்ளாஷ் வாங்குகிறார்.
இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்டுவது போல் வந்து மிரட்டி எடுத்துச் சென்றுவிட்டார் நாயகி துஷாரா. ப்ப்ப்ப்ப்ப்ப்பா… என்னா பெர்பார்மன்ஸ்… காதல், நான் ஒரு உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகள் … நானே என்னை சேர்த்து வச்சிகிட்டேன் என சொல்லும் காட்சிகளாக இருக்கட்டும், ப்ளாஷ் பேக் காட்சிகளில் தன்னை சொல்லும் போது வந்த பெர்பார்மன்ஸாக இருக்கட்டும், என காட்சிக்கு காட்சி ஆச்சர்யப்பட தான் வைத்திருக்கிறார் துஷாரா.
நாடகக் கம்பெனியில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம்படும் படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.
சமூகத்தில் பலரும் கேட்கும் கேள்வியை கேட்கும் நபராக கலையரசன் நடித்திருக்கிறார்.
படத்தின் நீளம் அதிகம் என்றாலும், அதையும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று சுவாரஸ்யம் கொண்டு சூடு ஏற்றியிருந்தால் இன்னும் வேகமாக இந்த நட்சத்திரம் நகர்ந்திருக்கும்.,
படத்தின் நடு நடுவே காதலால் தமிழகத்தில் அரங்கேறிய ஆணவக் கொலைகளை காட்சிப்படுத்தியதற்காக இயக்குனர் பா ரஞ்சித்தை வெகுவாகவே பாராட்டலாம். பலரும் தொட தயங்கும், தொட்டும் தோல்வியடைந்த கதையை கையில் எடுத்து ஒரு கோணத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.
டென்மாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான்.. பின்னணி இசையும் ஓகேதான்..
கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் தான்.
ஜெயரகுவின் கலை ஈர்க்கும்படியாக இருந்தது. வழக்கமான பா ரஞ்சித்தின் படமா என்று கேட்டால் நிச்சயம் இது இல்லை என்று கூறிவிடலாம். மாற்றமான கதை தான், பாராட்டைப் பெற்றுவிட்டது.
நட்சத்திரம் நகர்கிறது – கொஞ்சம் ஸ்லோவாக நகர்கிறது…





