
சீயான் விக்ரம் நடிக்க அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “கோப்ரா”. உலகம் முழுவதும் சுமார் 1300 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது.
படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் படத்தின் நீளத்தை சுமார் 20 நிமிடங்களை வரை குறைத்திருக்கிறார்கள்.
இன்று மாலை முதல் அனைத்து திரையரங்குகளிலும் நீளம் குறைக்கப்பட்ட காட்சிகளே திரையிடப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Facebook Comments