Spotlightசினிமாவிமர்சனங்கள்

வரலாறு முக்கியம் – விமர்சனம் 3/5

ந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, விடிவி கணேஷ், காஷ்மிரா, பிரக்யா நக்ரா, ஷாரா, டி எஸ் கே, கே எஸ் ரவிக்குமார் என நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “வரலாறு முக்கியம்”.

இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கதைப்படி,

கே எஸ் ரவிக்குமார் – சரண்யா பொன்வண்ணனுக்கு மகனாக வருகிறார் ஜீவா. இவர்கள் வசிக்கும் அதே தெருவில் மலையாள குடும்பம் ஒன்று புதிதாக வருகிறது. அதில், அக்கா தங்கையாக வருகிறார்கள் காஷ்மிராவும் பிரக்யாவும்.

பிரக்யாவிற்கோ ஜீவா மீது ஈர்ப்பு வர, ஜீவாவுக்கு அவரது அக்கா காஷ்மிரா மீது காதல் வருகிறது. தனது காதலை காஷ்மிராவிடம் கூறுகிறார் ஜீவா, சில நாட்கள் கழித்து காதலை காஷ்மிரா ஏற்றுக் கொள்கிறார்.

தன் மகள்களை துபாய் மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் காஷ்மிராவின் தந்தை. இதை எல்லாம் மீறி காஷ்மிராவை ஜீவா கரம் பிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜீவா, இளமை துள்ளலாக நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். துறுதுறுவென தனது நடிப்பை இன்னமும் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார் ஜீவா.

அழகு துள்ளலாக நடித்து ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் அணுஅணுவாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரு கண்களுக்கும் விருந்து படைத்த இரு நாயகிகளான காஷ்மிராவும் பிரக்யாவும்.

ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக அழகை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர் இரு அழகிகளும். படத்திற்கு பலமாக இருக்கிறார்கள்.

ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் ஜீவா இவர்கள் கூட்டணி அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் சரவெடி தான். 18+ காமெடிகள் தான் என்றாலும், கதையோடு நகர்வதால் ரசிக்க வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு பெண் வேடத்தில் ஜீவா அடிக்கும் லூட்டிகள் சிரிப்பலைகளை சிதறடிக்கிறது.

ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது… பொத்தி பொத்தி வளர்த்த மேகலை பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

சக்தி சரவணின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்..

லாஜிக் பார்க்காமல் ஒருமுறை ரசிக்க தாராளமாக பயணப்படலாம் இந்த வரலாறு முக்கியம் படத்திற்கு ..

நண்பர்களோடு சேர்ந்து வீக்-எண்ட் கொண்டாட்டத்திற்கு தாராளமாக சென்று வரும் படமாக இருக்கிறது “வரலாறு முக்கியம்”..

Facebook Comments

Related Articles

Back to top button