Spotlightசினிமாவிமர்சனங்கள்

லத்தி – விமர்சனம்

றிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் லத்தி. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை ”லத்தி” பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்

கதைப்படி

விஷால் சுனைனா தம்பதியினருக்கு ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு மகன் இருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆன விஷால் செய்யாத குற்றத்திற்காக நிரபராதி ஒருவரை ஸ்டேஷனில் வைத்து லத்தியால் தாக்கியதற்காக ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறார்…

பிறகு உயர் அதிகாரி ஒருவரை பிடித்து அவரது உதவி மூலமாக ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணியில் அமர்கிறார் விஷால். இனி லத்தியை தொடக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் விஷால், தனது உயர் அதிகாரிக்காக மிகப்பெரும் தாதாவான சுறாவின் மகனான வெள்ளையை லத்தியால் அடித்து விடுகிறார்.

இதனால் கோபமடையும் வெள்ளையும் சுறாவும் விஷாலை தேடி அலைகின்றனர். இறுதியில் வில்லன்களின் கையில் சிக்கும் விஷால், எப்படி தப்பித்தார்.? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஷால் தனி ஒருவராக லத்தியை தாங்கி தூணாக நிற்கிறார். ஒட்டுமொத்த கதையையும் தன் தோள் மீது தாங்கிக் கொண்டு செல்கிறார் விஷால். ஒரு தந்தையாகவும் நேர்மை தவறாத போலீஸாகவும் தனது கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தனது உடல் உழைப்பையும் கொடுத்து படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே ஈடு கொடுத்திருக்கிறார். மனைவியாக சுனைனா தனது முத்திரையை முழுமையாக கொடுத்திருக்கிறார்.

மகனாக நடித்திருந்த அந்த சிறுவனும் அழகூற நடித்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நம்மை ஈர்க்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

தனித்துவமான கதை என்றாலும், ஒரு சில படங்களின் கதை எட்டிப் பார்ப்பதால் லத்தி சற்று ஏமாற்றம் அடையவைக்கிறது.

பீட்டர் ஹெயினின் சண்டைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைத்தது. க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று உயிரோட்டம் கொடுத்திருந்தால் லத்தி இன்னும் வீறு நடை போட்டிருக்கலாம்.

கதையை கொண்டு சென்ற விதத்திறாக இயக்குனர் வினோத் குமாருக்கு பெரிதாக வாழ்த்துகளை கூறிக் கொண்டு

லத்தி – சரியாக பதம் பார்க்கவில்லை..

Facebook Comments

Related Articles

Back to top button