Spotlightசினிமாவிமர்சனங்கள்

பூக்கி – விமர்சனம்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் தீஷன், தனுஷா, பாண்டிராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக்பாஸ் சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் ”பூக்கி”.

இந்தப் படத்தினை கணேஷ் சந்திரா எழுதி இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்திற்கு இவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, மற்றும் வசனங்களை புதிய பரிதி செய்திருக்கிறார்.

கதைப்படி,

அஜய் தீஷன் மற்றும் தனுஷா இருவரும் காதலர்கள். படத்தின் முதல் காட்சியிலே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். இருவரும் பிரிந்ததற்கு பிறகு அவர்கள் என்ன மாதிரியான மனக்குமுறல்களை மனக்கஷ்டங்களை சந்தித்தனர் என்பதே இந்த படத்தின் ஒரு மெயின் ஸ்டோரி என்றே கூறலாம்.

இவர்கள் பிரிந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில் அந்த ஒரு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்ன சந்தித்த மனிதர்கள் யார் யார் அவர்கள் மூலம் இவர்கள் கற்றுக் கொண்டது என்ன.?

அஜய் தீஷனும் தனுஷாவும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

பூக்கி ஒரு படமாக இல்லாமல் இந்த கால இளைஞர்களுக்கு காதலில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது என்றே கூறிவிடலாம். அனைவராலும் அதிகமாக விருப்பப்படும் ரசிக்கப்படும் ரீல்ஸ் பார்த்த ஒரு உணர்வை இந்த படம் அனைவரிடத்திலும் கொடுத்திருக்கிறது.

அதிகப்படியான சீன்களை படத்தில் எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்த கால இளைஞர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள்? அவர்களின் காதல் எதுவரை? இருக்கிறது? எந்த எல்லையில் வரை செல்கிறது? அவர்களுக்குள் இருக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் ? என்ன என்பதை அவ்வளவு ஸ்வீட்டாக இந்த படத்தின் வாயிலாக கூறி இருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக அஜய் தீஷன், கதைக்கேற்ற நாயகனாக மிகச் சரியாக பொருந்தியிருக்கிறார். சின்ன சின்ன இடங்களில் கூட க்யூட் ரியாக்ஷன்களை கொடுத்து நன்றாகவே படம் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார்.

நாயகி தனுஷாவும்நடிப்பிலும் அழகிலும் அனைவரும் அனைவரும் ரசிக்கும்படியாக இருந்திருக்கிறார்.

மூத்த நடிகர் ஆன பாண்டியராஜன் தனது அனுபவ நடிப்பை படத்தில் கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தனது மகன் வாங்கிய வீட்டைச் சென்று ரசித்து கொள்ளும் அந்த காட்சியில் படம் பார்ப்பவர்கள் அனைவரும் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். மேலும், சுனில் தெலுங்கில் மிகப்பெரும் நடிகரான இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிக்க வைத்திருக்கிறார்.

மேலும், படத்தில் நடித்த லட்சுமி மஞ்சு, இந்துமதி, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்து முடித்து இருக்கின்றனர்.

இந்த கால இளைஞர்கள் அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை குறிப்பாக GEN Z இளைஞர்களுக்கான படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கணேஷ் சந்திரா. AI தொழில்நுட்பத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதற்காகவே இவரை நன்றாகவே பாராட்டலாம். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நிறைகள் படத்தில் அதிகமாக இருப்பதால் நிச்சயம் இந்த படத்தை ரசிக்கலாம் கொண்டாடலாம்.

பூக்கி – நிகழ்கால காதலர்களின் காதல் கதை…

Facebook Comments

Related Articles

Back to top button