Spotlightசினிமா

அறிவழகன் இயக்கத்தில் லக்‌ஷ்மி மேனன்

ரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்.

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”. தற்போது இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்.

ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி – லக்‌ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button