
நடிகர், நடிகைகள் :
வெற்றி ,தியா மயூரிக்கா , கேஜிஎப் ராம், எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன் , மாரிமுத்து , கபாலி விஷ்வந்த் , ரவி வெங்கட்ராமன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – குரு ராமானுஜம்
இசை – சாம் CS
கேமரா – சுரேஷ் பாலா
தனது நண்பன் ஆந்திராவிற்கு சந்தன மரம் வெட்டுவதற்காக சென்றிருக்கிறார் என்று அறிந்த வெற்றி, நண்பனை தேடி அங்கு செல்கிறார்.
ஆந்திரா சென்றதும், அங்கு சந்தன மரம் கடத்துனதாக கூறி வெற்றியை கைது செகிறது ஆந்திரா போலீஸ். கூடவே, எம் எஸ் பாஸ்கர் உட்பட ஏழு தமிழர்களையும் கைது செய்கிறது ஆந்திரா போலீஸ்.
சந்தன மரங்களை திருட்டுத் தனமாக வெட்டுவதில் கிக் மேக்கராக இருக்கிறார் கே ஜி எப் ராம். மரங்களை வெட்டுவதற்காக மட்டும் தமிழர்கள் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறார்கள்.
வெற்றி, எம் எஸ் பாஸ்கர் உட்பட ஆந்திர போலீஸில் சிக்கிய தமிழர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
கதைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து, தனக்கான பாணியில் பயணித்து வரும் வெற்றிக்கு இப்படம் ஒரு மைல்கல் தான். தனது அடுத்தடுத்த படங்களில் தேர்ச்சியான நடிப்பைக் கொடுத்து வருகிறார். இன்னும் சற்று பயிற்சி வேண்டும் வெற்றியே…
நாயகியாக, தியா மயூரிக்கா குறைந்த காட்சி என்றாலும் நிறைவாக மனதில் நிற்கிறார்.
கே ஜி ராம் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். தோற்றம், பாடி லேங்குவேஜ் என அனைத்தும் ஓகேவாக இருந்தும், அவ்வப்போது கத்திக் கொண்டு இருப்பது சற்று எரிச்சலடைய வைத்துவிடுகிறது. அதை அவர் குறைத்துக் கொள்வது நலம்.
எம் எஸ் பாஸ்கர் அனுபவ நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நடித்த நடிகர்கள் அனைவரும் கொடுத்ததை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள்.
சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு ரகம்.
சந்தனமரம் வெட்டச் சென்ற தமிழர்களை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டு, அறியாமையால் அங்கு தமிழர்களை சென்றதை இன்னும் சற்று அழுத்தமாகவே காட்டியிருந்திருக்கலாம்.
மற்றபடி,
ரெட் சண்டல் வுட் – ரத்தம் படிந்த மரங்களின் கதை..





