SpotlightUncategorizedவிமர்சனங்கள்

நறுவீ – விமர்சனம் 2.5/5

இயக்கம்: சுபாரக் முபாரக்

நடிகர்கள்: ஹரீஷ் அலக், விஜே பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, ப்ரவீனா, காதே, முருகானந்தன், ப்ரதீப், மதன் ராஜா, சாரதா நந்தகோபால்

இசை: அஸ்வத்

தயாரிப்பு: அழகு பாண்டியன்

கதைப்படி,

நீலகிரி அருகே ஒரு அழகிய மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். அங்கிருக்கும் காட்டிற்குள் ஆண்கள் யாராவது சென்றால் அவர்கள் உயிரோடு திரும்ப மாட்டார்கள் என்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வி ஜே பப்பு மற்றும் பாடினி குமார் உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் குழுவினர் அங்கு ஆராய்ச்சி செய்வதற்காக செல்கின்றனர். சென்ற இடத்தில், அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

பல விநோதமான நிகழ்வுகள் இவர்களை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. இறுதியில், இவர்கள் அனைவரும் அந்த வனப்பகுதிக்குள் இருந்து தப்பித்து வந்தார்களா.? அந்த வனப்பகுதிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது.? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து கொடுத்திருக்கும் படம் தான் இந்த நறுவீ.

கதைக்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்து படத்தின் கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார் ஹரிஷ் அலக். புதுமுகம் என்றாலும், கதாபாத்திரத்திற்கான மெனக்கெடல் அவரது நடிப்பில் நன்றாகவே தெரிகிறது.

மேலும், வி ஜே பப்பு மற்றும் பாடினி குமார் இருவரும் தங்களது நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கின்றனர். ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் உள்ளிட்ட சீனியர் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பெரும் பலமாக இருந்திருக்கிறது.

அஸ்வத் இசையில் பாடல்கள் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம். பின்னணி இசையில் நன்றாகவே கவனம் ஈர்த்துவிட்டார்.

ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பில்லராக இருந்திருக்கிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு அதில் சற்று அமானுஷ்யத்தைக் கலந்து படத்தினைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். தனித்தனி காட்சிகளாக படத்தினை பார்க்கும்போதுமிரட்டலாக இருந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திருக்கும் படமானது, திரைக்கதையாக படம் செல்லும் இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

படத்தில் சொல்ல வந்த கருத்தை இயக்குனர் சொல்லாமலும் செல்லவில்லை. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் வாழ்வியலையும் கண்முன்னே கொண்டு வந்து கண்கலங்க வைத்துவிட்டார் இயக்குனர்.

எடுத்த முயற்சிக்காக படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button