
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – பால்ராஜ்
நடிகர்கள்: பால்ராஜ், காயத்ரி ரேமா, சுவேதா ஸ்ரீ, ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார்
ஒளிப்பதிவு: உதயன்
இசை: விஜய் பிரபு
படத்தொகுப்பு: கே சங்கர்
கதைப்படி,
6 குழந்தைகளை பெற்று பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நாயகன் பால்ராஜ். இதற்கு. சம்மதம் தெரிவித்து பால்ராஜை திருமணம் செய்து கொள்கிறார் நாயகி காயத்ரி ரேமா..
இருவரும் திருமண செய்து கொள்கின்றனர்… ஒரு மகன் பிறக்கிறார். ஒரு மகனோடு போதும் இனி தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விடுகிறார் காயத்ரி ரேமா.
இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்படுகிறது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இருவரும் ஒரே வீட்டிற்குள் இருந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் நடக்க, மற்றொருபுறம் திருமணத்திற்கு பிறகு நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டு நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசையில் தனது மாமன் மகனை திருமணம் செய்து கொள்கிறார் சுவேதா ஸ்ரீ.
திருமணத்திற்கு பிறகு சுவேதா ஸ்ரீ யின் கணவர் தினசரி குடித்துவிட்டு வருவதால், இல்லற வாழ்க்கையில் சரியாக ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்து போய் நிற்கதியாய் நிற்கும் ஒரு வாழ்க்கையில் இருந்து வருகிறார் ஸ்வேதா ஸ்ரீ.

இந்த சூழ்நிலையில் தான் பால்ராஜ் மற்றும் சுவேதா ஸ்ரீ இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்கள் பழகுவதை நேரில் பார்த்த காயத்ரி ஷாக் ஆகிறார். இதனால் பால்ராஜுக்கும் காயத்திற்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதிக் கதை.
நாயகன் பால்ராஜ் கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இவரே இயக்குனர் தயாரிப்பாளர் என்பதால் படத்திலும் ஹீரோவாக நானே நடிப்பேன் என்று அடம்பிடித்து நடித்திருக்கிறார் போலும். கதையின் நாயகனாக ஓகே என்றாலும் பல இடங்களில் இன்னும் சற்று நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கலாம் என்று என்ன வைத்து விட்டார் பால்ராஜ்.
பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த காயத்ரி ரேமா இப்படத்தில் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் ஸ்வேதா ஸ்ரீயின் நடிப்பும் முகபாவனையும் தான். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவிற்கு தனது நடிப்பை கொடுத்திருக்கிறார்.

எங்கோ ஆரம்பித்த கதை எங்கோ செல்வது போல கதையானது ட்ராக் மாறி மாறி கொண்டு கிளைமாக்ஸில் ஏதோ ஒரு தகவலை சொல்லிவிட்டு செல்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
உதயன் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது. விஜய் பிரபு அவர்களின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது. பின்னணி இசையைக் கதைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார்.
மேலும் படத்தின் படத்தில் நடித்திருந்த ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவாக அளவாக கொடுத்து நடித்திருக்கின்றனர்.
கதையின் சுவாரசியத்தை திரைக்கதையை இன்னும் சற்று வேகப்படுத்தி கதைக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்றியிருந்திருக்கலாம் என்று கூற வைத்திருக்கிறார் இயக்குனர்.





