தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா, தற்போது முன்னனி(முன்னிலைப்படுத்தும்) கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.
அவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. படத்தின் ‘எனக்கு கல்யாண வயசு.. ‘ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த எதிர்பார்ப்பு படத்தின் மீதும் ஏற்பட்டது.
படத்தின் விமர்சனத்திற்கு போய்விடலாம்…
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, வேலைக்கு போய் தாய் தகப்பன்,தங்கையை காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அம்மா சரண்யாவுக்கு நுரையீரல் புற்றுநோய் என்றும் அதற்கு வைத்தியம் பாக்க பதினைந்து லட்சம் செலவாகும் என்ற அதிர்ச்சி அவர்மீது விழுகின்றன. எதிர்பாராத விதமாக போதைப்பொருள் (கோலாமாவு) கடத்தும் கும்பலிடம் சிக்கி மீளும் நயன்தாரா, அதை கைமாற்றினால் கிடைக்கும் கமிஷன் பணத்தை வைத்து அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கலாம் என அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார்.
போதை பொருள் சரக்கை தான் கைமாற்றி தருவதாக ஒப்புக் கொள்கிறார் நயன்தாரா. பல முறை கைமாற்றி கொடுக்கும் ஒருமுறை போலீஸில் சிக்கிக் கொள்கிறார். பிறகு தப்பித்துக் கொள்ளும் நயன்தாரா, இருந்தாலும் பயம் ஒட்டிக் கொண்டதால், இத்துடன் இந்த வேலையை நிறுத்திக்கொள்வதாக கூறி , செய்த வேலைக்கு கூலி கேட்க,வேலை கொடுத்தவனோ நயன்தாராவையே கேட்கிறான்.. அவனை தாக்கி தப்பிக்கும் நயன்தாராவிடம், அவனுக்கு பதிலாக மொத்த சரக்கையும் கைமாற்றும் வேலையை கொடுத்து மிரட்டுகிறார் பாம்பே தாதா ஹரீஷ் பெராடி.
ஒரு பக்கம் ரவுடி கும்பல் மறுபக்கம் போலீஸ் இவர்களின் பிடியில் இருந்து நயன்தாரா தப்பித்தாரா இல்லையா என்பதே மீதிக் கதை…
படம் முழுவதும் நாயகியை சுற்றிலே நகரும் கதை அமைப்பு என்பதால், நயன்தாரா.
பயந்த சுபாவத்துடன் வந்து கொண்டிருந்த நயன்தாரா, இடைவெளிக்குப் பிறகு மிரட்டலில் மிரள வைத்திருக்கிறார். ஆங்காங்கே, நானும் ரெளடிதான் காதம்பரி எட்டிப் பார்த்து சென்றது போல ஒரு உணர்வு…
நயன்தாராவின் தங்கையாக வந்த விஜய் டிவி ஜாக்குலின், இந்த பொண்ணு என்னப்பா இப்படி நடிக்குது என்ற ஆச்சரியம் படம் முழுவதும் இருந்தது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் தாய் கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், யோகி பாபு தான்… மனுஷன் வர்ற இடத்துல எல்லாம் சிரிக்க வச்சிட்டு போறாரு.. சூப்பரோ சூப்பர்.
அனிருத்தின் இசையில் ‘கல்யாண வயசு தான்’பாடல் ரிப்பீட் ரகம். பின்னனி இசை பயணம்.
கோலமாவு கோகிலா – யோகி பாபு, நயன்தாராவிற்காகவே கோலமாவ நிச்சயம் ரசிக்கலாம்….