
Actor & Actress: Sudharsan Govind, Archenaa Ravi, Prathu (Prathosh), Noble james, Vidya, Y Gee Mahendran, Nizhalgal Ravi , MJ sriram, Rethika Srinivas
Production: Zhen Studios
Producer: Pugaz & Eden
Writer & Director : Ashokkumar Kalaivani
Music : Ashwin Hemanth
DOP : Raja Bhattacharjee
Editor : S.A.Nagarjun
தனது காதலனை திருமணம் செய்ய, வீட்டை விட்டு ஓடிச் சென்று விடுகிறார் ஒய் ஜி மகேந்திரனின் மகள். தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக எண்ணுகிறார். சில வருடங்களிலேயே கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் ஒரு குழந்தையும் ஏந்திக் கொண்டு மீண்டும் தனது அப்பாவின் வீட்டிற்கே வந்துவிடுகிறார்.
இனி நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று ஒரு அதட்டலான கட்டளை ஒன்றை இட்டு, இரு பேரக்குழந்தைகளையும் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறார் ஒய் ஜி மகேந்திரன்.
பேரனாக வருகிறார் நாயகன் சுதர்ஷன் கோவிந்த். நன்றாக படித்து ஒரு அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்குகிறார். நீ பார்எவர் என்ற ஒரு அப்ளிகேஷனை டெவலப் செய்வதற்காக பல நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்நிலையில், சிறுவயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்து வருபவர் தான் நாயகி அர்ச்சனா ரவி. எந்தவொரு பாசமும் கிடைக்காமல் வளரும் அவர், இயக்குனராக வேண்டும் என்ற பாதையில் பயணித்து வருகிறார்.
நீ பார் எவர் அப்ளிகேஷன் டேட்டிங் ஆப் என்பதால், காதலைப் பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கூறி சுதர்ஷனை அனுப்பி வைத்துவிடுகிறார்.
மற்றொருபுறம், நல்ல ஒரு காதல் கதை இருந்தால் வாருங்கள் என்று தயாரிப்பளர் ஒருவர் அர்ச்சனாவிடம் கூற, காதல் கதை எழுத காதலைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறார்.

அதற்காக இருவரும், டேட்டிங் ஆப் மூலம் சந்தித்துக் கொண்டு, பழக ஆரம்பிக்கின்றனர். இருவரும் எதற்காக சந்தித்துக் கொள்கிறோம் என்ற உண்மையை கூறாமல் பழக ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சுதர்ஷன் அர்ச்சனா மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார்.
காதல் என்று சொன்னாலே கோபம் கொப்பளித்து வரும் ஒய் ஜி மகேந்திரன், சுதர்ஷனின் காதலை ஏற்றுக் கொண்டாரா.? சுதர்ஷன் அர்ச்சனாவிடமும் அர்ச்சனா சுதர்ஷனிடமும் உண்மையை கூறிக் கொண்டார்களா இல்லையா.? இவர்களின் காதலும் கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சுதர்ஷன் கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு, சூதுவாது எதுவும் தெரியாமல், தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்த பையனாக மிகவும் சாதுவான கேரக்டராக இருப்பதும், பின் காதல் எண்ட்ரீ ஆன பிறகு, கெட்-அப் மாறி, முழு நீள காதல் நாயகனாக வாழ்ந்திருப்பதும் என தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருக்கிறார்.
மேலும், கதையின் நாயகியான அர்ச்சனா ரவி, அழகான தோற்றத்தோடும், அழகான நடிப்போடும் நம்மை நன்றாகவே கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
தனது அனுபவ நடிப்பை பல இடங்களில் காட்டியிருக்கிறார் ஒய் ஜி மகேந்திரன். மேலும், நண்பர்களாக நடித்த இருவரும் தங்களது கலகலப்பான நடிப்பால் நல்லதொரு எண்டர்டெயின்மெண்டை கொடுத்திருக்கின்றனர்.
சுதர்ஷன் மற்றும் அர்ச்சனா இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. இருவரின் கண்களும் படத்தில் அதிகப்படியான காதலை பேசுகிறது. ஒரு உணர்வை படம் முழுவதும் கடத்திக் கொண்டே சென்றிருக்கின்றனர்.
உண்மையான காதலர்கள் போன்றே நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.
ஒரு அழகான கதையை கையில் எடுத்து அதனை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். சின்ன சின்ன குறைகள் சற்று எட்டிப் பார்த்தாலும், நிறைவான காதலை தெகட்ட தெகட்ட ஒரு உணர்வோடு நமக்குள் கடத்தியிருப்பதால் படத்தை பெரிதாகவே கொண்டாடலாம்.
இசையும் ஒளிப்பதிவும் படத்தில் பெரிய பங்காற்றியிருக்கிறது. காதலை இசை நம்மிள் கடத்துவதால், அந்த கதையோடு பயணம் செய்ய இசை கைகொடுத்திருக்கிறது.
பொள்ளாச்சி ஏரியாவை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுமட்டுமல்லாமல், நாயகியின் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சியமைப்பு, க்ளைமாக்ஸ் ரெஸ்டாரண்ட் காட்சியமைப்பு என பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் படத்தில் ஏராளமாக உள்ளது.
காதலின் உணர்வை கடத்தும் ஒரு மாயவித்தையை படத்தில் வைத்திருப்பதால், இப்படத்தை அனைவரும் நிச்சயமாக கொண்டாடலாம்…
Nee Forever – காதலின் உணர்வு…





