Spotlightசினிமா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் “ராக்கா” !!

அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு அட்லீ இயக்கும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.

“ராக்கா” ஒரு  ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ கூறியதாவது..,
“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button